இரண்டு முக்கிய போட்டிகள் நாளைய தினம்

Saturday, 22 September 2018 - 13:38

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இரண்டு முக்கிய போட்டிகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளும் நாளை மோதவுள்ளன.

ஆசிய கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்ற லீக் போட்டியில் இந்தியா அணி எட்டு விக்கட்டுக்களால் வெற்றிபெற்றிருந்தது.

இதேவேளை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 136 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த நிலையில், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் முழுமையான வெற்றி முனைப்பில் நாளைய போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர சுப்பர் 4 சுற்றின் மேலும் இரண்டு போட்டிகள் 25 ஆம் 26 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

25 ஆம் திகதி இடம்பெறவுள்ள போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ள அதேவேளை, 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள போட்டியில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டிகளில் அணிகள் பெறும் வெற்றிகளின் அடிப்படையில், எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறும் இறுதிப் போட்டிக்கான அணிகள் தெரிவாகவுள்ளன.