அமெரிக்கா மீது ஈரான் ஜனாதிபதி குற்றச்சாட்டு

Sunday, 23 September 2018 - 19:42

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
ஈரானிய இராணுவ அணிவகுப்புக்கு எதிராக நேற்று இடம்பெற்ற தாக்குதலுக்கு அமெரிக்கா பின்னணியில் செயல் பட்டதாக ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரொவ்ஹானி குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்காவின் ஒத்துழைப்பின்றி இந்த தாக்குதலை எவரும் மேற்கொண்டிருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 12 ஈரானிய இராணுவத் தரப்பினர் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் 4 வயது பெண் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வாரம் ஐக்கிய நாடுகளின் அமர்வின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரொவ்ஹானி சந்திப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், நேற்றைய தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினாலேயே மேற்கொள்ளபட்டிருக்கலாம் என அரேபிய சிறுபான்மையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த குழுவினரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.