வௌிநாடு சென்று வருவோருக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

Monday, 24 September 2018 - 11:07

%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
வெளிநாடுகளில் இருந்து, தாவரங்கள், விலங்குகள், இறைச்சி மற்றும் பழங்களை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்நாட்டுக்கு கொண்டு வரும் போது , அவற்றை கொள்வனவு செய்த நாட்டில் அது தொடர்பில் பெற்றுக்கொண்ட தௌிவாக்கல் சான்றிதழ் அத்தியாவசியமானது என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

தௌிவாக்கல் சான்றிதழ் இன்றி கொண்டுவரப்படும் அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு , விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கு அவை அனுப்பப்பட்டு அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

இலங்கை மக்களை வௌிநாட்டு கிருமிகள் , நோய்கள் மற்றும் இலங்கை பயிர்களை வௌிநாட்டு பூஞ்சைகளில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.