வரி அதிகரிப்பினால் மூன்று சீனி இறக்குமதியாளர்களுக்கு 600 மில்லியன் ரூபாய் இலாபம்?

Monday, 24 September 2018 - 19:29

%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+600+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%3F
ஒரு கிலோ சீனியின் இறக்குமதி வரி 17 ரூபாய் 50 சதத்தினால் அதிகரிப்பதற்கு முன்னர், பல வர்த்தகர்கள் சீனியை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

சீனி இறக்குமதியாளர்கள் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 60 ஆயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான சீனி மூன்று வர்த்தகர்களினால், சீனி இறக்குமதி வரி அதிகரிப்பதற்கு முன்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த சீனித் தொகையை விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் 600 மில்லியன் ரூபாவினை லாபமாக பெறுவார்கள் எனவும், இதன் ஊடாக ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதா? என்பது குறித்து ஆராயுமாறு சீனி இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறையிடவுள்ளனர்.