உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மேலும் அதிகரிப்பு

Tuesday, 25 September 2018 - 11:26

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட கோரிக்கையை சவுதி அரேபியாவும் ரஸ்யாவும் நிராகரித்தமையால் உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 81 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது.

பிரேண்ட் ரக மசகு எண்ணெயின் விலை நான்கு வருடங்களுக்கு பின்னர், அதாவது 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிக மதிப்பை எட்டியதுடன், நேற்றைய தினம் அமெரிக்க டொலர்  81.16 சதமாக பதிவாகியது.

ஒரு நாளுக்குள் இவ்வாறு மசகு எண்ணெயின் விலை நூற்றுக்கு 3 சதவீமாக அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஒபேக் நாடுகளில் மசகு எண்ணெயை அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடு சவுதி அரேபியாவாகும்.

இதனுடன் ரஸ்யா ஒபேக் அமைப்பின் வெளியே பாரியளவு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகும்.

மசகு எண்ணெய் விலை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்ஜீரியாவில், அவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்வின்றி நிறைவடைந்துள்ளது.