பிபா விருதை வென்ற லூகா மோட்ரிக்

Tuesday, 25 September 2018 - 13:46

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B2%E0%AF%82%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D
2018 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருதை குரோசியா அணியின் தலைவர் லூகா மோட்ரிக் வென்றுள்ளார்.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

இந்த விருதிற்கான இறுதி பட்டியளில் 5 முறை விருது வென்ற, க்ரிஸ்டியனோ ரொனால்டோவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில், ரொனால்டோவை பின்தள்ளி 33 வயதான லூகா மோட்ரிச் 2018ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றுள்ளார்.

இந்த வருடம் ரஷ்யாவில் நடைபெற்ற உலக் கிண்ண கால்பந்து போட்டியில் முதல்முறையாக குரோசியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதற்கு அந்த அணியின் தலைவர் லூகா மோட்ரிச்சின் முக்கிய காரணமாக அமைந்தார்.

உலகக் கிண்ண போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியமையால் அவருக்கு தங்க கால்பந்து விருதும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.