எழுவரின் விடுதலை தொடர்பில் ஆளுநர் காலம் தாழ்த்த கூடாது

Tuesday, 25 September 2018 - 19:29

%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81
இந்திய முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் எழுவரின் விடுதலை தொடர்பில் ஆளுநர் காலம் தாழ்த்த கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று அவர்களை விடுதலை செய்ய ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் தீர்மானிக்கலாம் என உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்தநிலையில், கடந்த 9 ஆம் திகதி, அவர்களை விடுவிப்பதற்கான தமிழக அரசாங்கத்தின் பரிந்துரை நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.