அரசியல் கைதிகளில் பிரச்சினை தொடர்பில் ஆனந்த சங்கரி , நீதியமைச்சரிடம் கோரிக்கை

Tuesday, 25 September 2018 - 19:58

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF+%2C+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
அரசியல் கைதிகளின் உறவுகளுக்குரிய அனுதாபத்துடன் அரசியல் கைதிகளின் பிரச்சினையை அணுக வேண்டும் என நீதியமைச்சர் தலதா அத்துகோரலவிடம், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், வீ.ஆனந்த சங்கரி, நீதியமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக தாம் எதுவித விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமையே, அரசியல் கைதிகளின் துயரமாகவுள்ளது.

கடந்த காலத்தில் கடும் குற்றச் செயலில ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், பல்வேறு காரணங்களினால், அவர்களின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு 14 ஆண்டுகளில் அவர்கள் விடுதலையாவது சாதாரணமான ஒன்றாகும்.

தடுப்பில் உள்ளவர்களின் உறவினர்கள் பல வருடங்களாக எத்தனை துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்பதை, ஓர் தாயாக நீதியமைச்சர் அறிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே மனிதாபிமான அடிப்படையில் பயங்கரவாத சட்டத்தை ஒதுக்கி வைத்து, இந்த விடயம் இயற்கையான நீதிக்கு உட்பட்டதாக அமைய வேண்டும் என்பதே தமது கோரிக்கை என வீ. ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.