தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்

Wednesday, 26 September 2018 - 9:29

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
வடகிழக்கு பருவ ம​ழை ஆரம்பமாகியுள்ள நிலையில் , டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்குடன் இன்று தொடக்கம் தேசிய டெங்கு ஒழிப்பு வாரமொன்று ஆரம்பமாகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம்  2ம் திகதி வரை இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெங்குகள் அற்ற நாடு என்ற தொனிப்பொருளில் இந்தவாரம் அனுஷ்டிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் , இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.