Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+27%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE+
Monday, 01 October 2018 - 15:34
எதிர்வரும் 27ம் திகதி இடம்பெறவுள்ள ஹிரு கோல்டன் திரைப்பட விருது வழங்கும் விழா
567

Views
எமது சகோதர தொலைக்காட்சியான ஹிரு டிவியின் 3வது கோல்டன் திரைப்பட விருது வழங்கும் விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ம் திகதி இடம்பெறவுள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இந்த விருது வழங்கும் விழா இடம்பெறவுள்ளது.

இலங்கை திரைப்பட துறையினரை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இம்முறை ஹிரு கோல்டன் திரைப்பட விருது வழங்கும் நிகழ்வில் பொலிவுட் நடிகர்களான கோவிந்தா , சைப் அலி கான் , சித்தார்த் பல்கோத்ரா , சில்பா ஷெட்டி , சோனாக்‌ஷி சின்ஹா , ஜூஹி சவுலா மற்றும் சரின் கான் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது, 2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் திரையிடப்பட்ட திரைப்படங்கள் மற்றும் அந்த வருடங்களில் தயாரிக்கப்பட்ட 150 குறுந்திரைப்படங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தெரிவுகளுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இலங்கை திரைப்படத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச தரத்துடன் இடம்பெறவுள்ள 3வது ஹிரு கோல்டன் திரைப்பட விருது வழங்கும் நிகழ்வு, ஆசிய ஊடக வலையமைப்பின் தலைவர் ரேனோ சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அவரது எண்ணக்கருவிற்கு அமைய 16 வருடங்களுக்கு முன்பாக நாட்டின் வானொலி துறைகளில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு அமைய ஹிரு எப்.எம். சூரியன் எப்.எம். ஷா எப்.எம் கோல்ட் எப்.எம். சன் எப்.எம். ஆகிய வானொலிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதனையடுத்து இலங்கை தொலைக்காட்சித் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் ஹிரு ரி.வி. சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இவை நாட்டின் பெரும்பான்மையான ரசிகர்களின் மனதை வெல்லும் வகையில் பல ஜனரஞ்சகமான படைப்புக்களை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன.

வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் பல வெற்றிகளை பெற்றுள்ள ரேனோ சில்வாவின் தலைமையிலான ஏ.பி.சி. ஊடக வலையமைப்புினால் கடந்த 2014ஆம் ஆண்டு தொடக்கம் கோல்டன் பிலிம் விருதுகள் வழங்கும் விழா ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா தற்போது மூன்றாவது முறையாகவும் இடம்பெறவுள்ளது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.மேலதிக விபரங்களுக்கு பிரவேசிக்கவும்- www.hirugoldenfilmawards.hirutv.lk

rn


rn
rn


rn
rn


rn
rn


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
993 Views
HiruNews
HiruNews
HiruNews
13,005 Views
HiruNews
HiruNews
HiruNews
9,509 Views
HiruNews
HiruNews
HiruNews
25,340 Views
HiruNews
HiruNews
HiruNews
73 Views
HiruNews
HiruNews
HiruNews
59,622 Views
Top