இன்று அதிகாலை உயிரிழந்த பிரபல பாடகர் பாலா பாஸ்கர்

Tuesday, 02 October 2018 - 13:50

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
இந்தியாவின் பிரபல பாடகரும், வயலின் வாத்திய கலைஞருமான பாலா பாஸ்கர், விபத்தை அடுத்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

கேரளாவின் திருவாந்தபுரத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தில் ஏலவே அவரது 2 வயதான மகள் உயிரிழந்தார்.

இதில் காயமடைந்த அவரது மனைவியும், வாகன சாரதியும் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

40 வயதான அவர் பல மலையாளத் திரைப்படங்களுக்கு இசை வழங்கி இருப்பதுடன், சர்வதேச அளவில் வயலின் இசை விற்பன்னராகவும் திகழ்ந்துள்ளார்.