Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 11 October 2018 - 18:08
துமிந்தவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு
50

Shares
6,037

Views
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூன்று பேரை குற்றமற்றவர்களாக்கி விடுதலைசெய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு இன்று உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.

எனினும், அனுர துஷார டி மெல் என்ற காவல்துறை அதிகாரியை விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பிரஜைகளுக்கும் கிடைக்க வேண்டிய சாதாரண நீதிவிசாரணை, தமக்கு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்படவில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 4 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மேன்முறையீட்டு மனு, சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் பிரதி மன்றாடியார் நாயகம் ஒருவரின் பங்களிப்புடன் 5 மாதங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

அத்துடன், இந்த மனுவை பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழாம் விசாரித்திருந்தது.

இந்த விசாரணையின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

இதன்போது, குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவரான அநுர துஷார டி மெல் என்ற காவல்துறை அதிகாரி மாத்திரம் குற்றமற்றவராக கருதி விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, சமிந்த ரவி ஜயனாத் மற்றும் சரத் பண்டார ஆகியோர் மீது சுமத்தப்பட்டிருந்த சட்டவிரோத துப்பாக்கி பயன்பாடு குறித்த குற்றச்சாட்டில் இருந்து மாத்திரம் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறெனினும், குற்றவாளிகள் தரப்பின் மேன்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன், மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
245 Views
HiruNews
HiruNews
HiruNews
3,251 Views
HiruNews
HiruNews
HiruNews
7,207 Views
HiruNews
HiruNews
HiruNews
18,658 Views
HiruNews
HiruNews
HiruNews
87 Views
HiruNews
HiruNews
HiruNews
47,832 Views
Top