Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Thursday, 11 October 2018 - 18:58
எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள விளைவுகள்
594

Views
எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாதென பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறெனினும், வரையறுக்கப்பட்ட எரிபொருள் கூட்டுத்தாபனத்தில், ஒட்டோ டீசலின் விலை அதிகரிக்கப்பட்டால் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எரிபொருளின் மாதாந்த விலை திருத்தங்களுக்கு அமைய, நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 155 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

95 ஒக்டேன் பெற்றோல் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 169 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூப்பர் டீசல் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் விலை 141 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒட்டோ டீசலின் விலை அதிகரிக்கப்படவில்லை.

எவ்வாறெனினும், ஐ.ஓ.சி நிறுவனம் ஒட்டோ டீசலின் விலையை 129 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, பெற்றொல் விலை அதிகரிப்புடன் முச்சக்கரவண்டி கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தினரின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, ஆரம்ப கட்டணம் அவ்வாறே அறவிடப்படவுள்ளதுடன், இரண்டாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படுகின்ற 40 ரூபாய் கட்டணத்தை 50 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலை சேவைகளில் ஈடுபடும் வான் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எரிபொருள் விலைகளை குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி காலி – ரத்கம நகரில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ரத்கம மற்றும் ஹிக்கடுவை உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
3,161 Views
HiruNews
HiruNews
HiruNews
56,579 Views
HiruNews
HiruNews
HiruNews
21,687 Views
HiruNews
HiruNews
HiruNews
47,024 Views
HiruNews
HiruNews
HiruNews
1,320 Views
HiruNews
HiruNews
HiruNews
106,305 Views
Top