சோளத்தின் உத்தரவாத விலையினை உறுதிப்படுத்த நடவடிக்கை

Thursday, 11 October 2018 - 20:26

%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
சோளத்தின் உத்தரவாத விலையினை உறுதிப்படுத்த விவசாயத்துறை அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் உள்ளுரில் சோள உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ சோளத்தின் விலை 43 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ சோள உற்பத்திக்காக விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 50 சதவீதத்தை செலவிடுகின்றனர்.

ஏற்கனவே சோள விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு அதிக உற்பத்தியை வழங்கக்கூடிய முறைமை குறித்து விவசாய திணைக்கள அதிகாரிகள் விசேட திட்டங்களை முன்வைத்திருந்தனர்.

அதேவேளை, விவசாயிகளிடம் இருந்து கிலோ ஒன்றிற்கு 43 ரூபாய் என்ற நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் அரசாங்கம் சோளத்தை கொள்வனவு செய்யவுள்ளது.

இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தவிர இந்த யோசனையின் கீழ் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏதாவது வகையில் நட்டம் ஏற்படும்பட்சத்தில் ஒரு ஏக்கர் விஸ்தீரனமான சோள பயிர்ச்செய்கைக்கு 40 ஆயிரம் ரூபா அல்லது ஒரு ஹெக்டேயர் விஸ்தீரனமான பயிர்ச்செய்கைக்கு ஒரு லட்சம் ரூபாவும் நட்டஈடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 64ஆயிரம் மெட்ரிக் டொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்ட அதேவேளை, இந்த வருடம் 2 லட்சம் மெட்ரிக் டொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.