12 நாடுகளில் பிரசார நடவடிக்கை

Sunday, 14 October 2018 - 14:05

12+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இலங்கை தேயிலை குறித்து எதிர்வரும் 3 வருட காலப்பகுதியில் 12 நாடுகளில் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ள இலங்கை தேயிலை சபை தீர்மானித்துள்ளது.

இந்த திட்டத்திற்காக 350 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அடுத்த மாதம் பிரசார நடவடிக்கைகள் ரஷ்யாவிலும் அதனை தொடர்ந்து சீனாவிலும் இடம்பெறும் என இலங்கை தேயிலை சபையின் தலைவர் லுசிலி விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னர் இலங்கையின் தேயிலைக்கு சர்வதேச ரீதியாக பெரும் மதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் மதிப்பு குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையினை போக்கும் நோக்கில் பிரசார யுக்திகள் மற்றும் நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தேயிலை மீள் நடுகை திட்டத்தின் மூலம் எதிர்வரும் நான்கு வருடத்தினுள் ஒரு கோடியே 50 லட்சம் கிலோ கிராம் நிறையிலான தேயிலையினை மேலதிகமாக பெற முடியும் என இலங்கை தேயிலை சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 4 வருட காலப்பகுதியினுள் நான்காயிரம் ஹெக்டயர் விஸ்தீரணமான காணியில் மீள்நடுகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு ஹெக்டயருக்கு 20 லட்சம் ரூபா நிதி செலவிடப்படும்.

அதேவேளை கடந்த நான்கு மாதங்கள் கடும் வரட்சி காரணமாக இந்த வருடத்தில் தேயிலை உற்பத்தி 14 சத வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.