நாட்டை உலுக்கும் லெப்டொஸ்பைரோசிஸ் கொடி நோய் - மக்கள் அவதானம்

Monday, 15 October 2018 - 12:52

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையுடன், லெப்டொஸ்பைரோசிஸ் (Leptospirosis) எனும் எலிக் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த 12 நாட்களில் 68 பேர் குறித்த எலி காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரையில் 3 ஆயிரத்து 303 பேர் குறித்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களுள் அதிகமானவர்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதன் எண்ணிக்கை 555 ஆக உள்ளது.

எனவே, லெப்டொஸ்பைரோசிஸ் (Leptospirosis) எனும் எலிக் காய்ச்சல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.