காமினி செனரதிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Monday, 15 October 2018 - 14:43

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 23ம் திகதி, நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

3 பேர் கொண்ட நீதிபதிகள் குழு இன்று இதனை அறிவித்தது.

லிற்றோ எரிவாயு நிறுவனத்துக்கு 50 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று முற்பகல் விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

இதனை அடுத்து எந்தெந்த ஆவணங்கள் தேவை என்பதை கோரி நீதிமன்ற பதிவாளருக்கு மனு மூலம் விண்ணப்பிக்குமாறு நீதிபதிகள் குழு பிரதிவாதிகளின் சட்டத்தரணிக்கு அறிவுறுத்தியது.