அமெரிக்காவின் பாதீட்டில் இந்த ஆண்டு துண்டுவிழும் தொகை 17 சதவீதத்தால் அதிகரிப்பு

Tuesday, 16 October 2018 - 13:26

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88+17+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அமெரிக்காவின் பாதீட்டில் இந்த ஆண்டு துண்டுவிழும் தொகை 5 ஆண்டுகளில் 17 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைந்த 2018ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் நிதியாண்டில் வருமானத்தைக் காட்டிலும் செலவு அதிகமாக பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு வரி விலக்குகளை வழங்கி இருந்தார்.

வர்த்தகத்துறைக்கான வரிவிலக்குகள் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்று அவர் எதிர்பார்த்த போதும், அதற்கு மாறான நிகழ்வே இடம்பெற்றிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2018ம் வருட நிதியாண்டில் அமெரிக்காவின் மொத்த வருமானம் 3.3 ட்ரில்லியன் டொலர்களாகும்.

எனினும் 4.1 ட்ரில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டை 2012ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய அதிகரிப்பு என்று தெரிவிக்கப்படுகிறது.