அமைதியாக இருந்தால் தீர்வை பெறலாம் - தெபுவன காவல்துறை உத்தியோகத்தர்

Wednesday, 17 October 2018 - 19:24

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D
உணர்ச்சி வசப்படாமல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு செயற்பட வேண்டும் என துப்பாக்கியுடன் அமைதியற்ற வகையில் நடந்துகொண்டதால் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு மீண்டும் இன்று சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட தெபுவன காவல்துறை உத்தியோகத்தர் சனத் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பின்னர் எமது செய்தி பிரிவிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காவற்துறை மா அதிபரின் பணிப்புரையின் படி தெபுவன காவல்துறை உத்தியோகத்தர் சனத் குணவர்ன மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த காவற்துறை அலுவலரால் பறிமுதல் செய்யப்பட்ட மணல் கடத்திய பாரவூர்தியொன்றை தெம்புவன காவல் நிலைய பொறுப்பதிகாரி விடுவித்ததாக தெரிவித்து கடந்த தினத்தில் துப்பாக்கியுடன் இவர் அமைதியற்ற வகையில் செயற்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் , காவற்துறை அலுவலர் சனத் குணவர்தன மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களை நேற்று மதியம் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களுக்கு 10 இலட்சம் ரூபாயினை நன்கொடையாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.