இங்கிலாந்து அணிக்கு இலங்கை நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு

Wednesday, 17 October 2018 - 22:09

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கண்டி – பல்லேகலை மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவிருந்த போட்டி மழைக்காரணமாக தடைப்பட்டிருந்தது.

பின்னர் இரவு 8.15 மணியளவில் ஆரம்பமான போட்டி 21 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 21 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் நிரோசன் திக்வெல்ல 36 ஓட்டங்களையும், சதீர சமரவிக்கிரம 35 ஓட்டங்களையும், அணித்தலைவர் தினேஸ் சந்திமால் 34 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷீத் 4 விக்கட்டுக்களையும், டொம் குரன் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

இன்னும் சற்றுநேரத்தில் இலங்கிலாந்து அணி பதிலுக்கு துடுப்பாடவுள்ளது.