Hirunews Logo
%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29
Thursday, 18 October 2018 - 18:42
டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் பதிவான மிகவும் வினோதமான ஆட்டமிழப்பு (காணொளி இணைப்பு)
5,981

Views
டெஸ்ட் கிரிக்கட் போட்டி வரலாற்றில் மிகவும் வினோதமான ஆட்டமிழப்பு ஒன்று இன்று பதிவாகியுள்ளது.

அபுதாபியில் இடம்பெற்று வரும் அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போதே இந்த வினோத ஆட்டமிழப்பு நிகழ்ந்துள்ளது.

அஸார் அலியும் (Azhar Ali) அஷாட் சபீக்கும் (Asad Shafiq) துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளை, அஸார் அலி அடித்த பந்து எல்லைக்கோட்டை நோக்கிச் சென்றது.

அந்த பந்து எல்லைக் கோட்டை கடந்துவிட்டது என்று எண்ணிய துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஆடுகளத்தின் மத்தியில் நின்று உரையாடிக்கொண்டிருந்தனர்.

ஆனால், அந்த பந்து எல்லைக்கோட்டை நோக்கி சென்றபோதும், எல்லைக் கோட்டைக் கடக்காமல், அதற்கு முன்பாகவே நின்றுவிட்டது.

இந்தநிலையில் ஓடிச்சென்று பந்தை எடுத்த அவுஸ்திரேலிய அணி வீரர் மிச்சல் ஸ்டாக்  அதனை விக்கட் காப்பாளர் டிம் பெயின்னுக்கு செலுத்த, பெயின் ஆட்டமிழப்புச் செய்தார்.

அந்த ஆட்டமிழப்பிற்கு பாகிஸ்தான் அணியினர் உட்பட அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தரும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

1844ஆம் ஆண்டு அதாவது 16ஆம் நூற்றாண்டில் முதன் முறையாக ஆரம்பமான டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் இதுவரையில் 2 ஆயிரத்து 321 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

எனினும் தற்போதுவரை இவ்வாறான வினோதமான ஆட்டமிழப்புகள் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆட்டமிழப்பு இதோ....

rn
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,991 Views
HiruNews
HiruNews
HiruNews
56,447 Views
HiruNews
HiruNews
HiruNews
21,626 Views
HiruNews
HiruNews
HiruNews
46,954 Views
HiruNews
HiruNews
HiruNews
1,297 Views
HiruNews
HiruNews
HiruNews
106,172 Views
Top