அடிப்படை வேதனம் 1000 ரூபாய் வேண்டும் - கருப்பு கொடிகளை ஏந்தி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

Friday, 19 October 2018 - 13:32

%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+1000+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் மலையகத்தின் பல பகுதிகளில் இன்றும் இடம்பெற்றன.

லிந்துலை நகரில் இருவேறு கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

முதலாவது கவனயீர்ப்பு பேரணி இன்று காலை 8.30 அளவில் மட்டுக்கலை தோட்டத்தில் ஆரம்பித்து ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதி ஊடாக லித்துலை நகரை நோக்கி சென்றடைந்துள்ளது.

இந்தப் பேரணியில், ஆயிரத்திற்கும் அதிகமான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் என எமதுசெய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

டீமலை மவுசாக்கலை நோனா தோட்டம் , வளஹா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 800 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

தலவாக்கலை நகரில் இன்று முற்பகல் 9.30 அளவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, ஹட்டன் - பொகவந்தலாவை - மஸ்கொலியா பிரதான வீதியின் நோர்வூட் சந்தியில் இன்று முற்பகல் போராட்டம் இடம்பெற்றது.

அதில், நோர்வூட், போற்றி, நியூடன், ஹைரபி, தரவளை ஆகிய தோட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்குகொண்டனர்.




(