சபரிமலைக்கு சென்ற இரு பெண்களுக்கு நேர்ந்த கதி

Friday, 19 October 2018 - 13:11

%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF
சபரிமலையை நோக்கி பயணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள், சந்நிதானத்தை நெருங்கிய வேளை, எதிர்ப்பு வலுபெற்றதை அடுத்து, காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

10 முதல் 50 வயது பெண்கள் சபரிமலைக்கு செல்வதை தடை செய்து பல நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வந்த மரபை அண்மையில் இந்திய உயர்நீதிமன்றம் நீக்கி இருந்ததன் பின்னர், முதன்முறையாக குறித்த வயது பெண்களினால் சபரிமலையை நோக்கி யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பெண்கள் அங்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஒரு ஊடகவியலாளர் உள்ளிட்ட இரண்டு பெண்கள், சபரிமலை யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களின் பாதுகாப்புக்காக 100க்கும் அதிகமான கலகம் அடக்கும் காவற்துறையினரும் உடன்செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவர்கள் சந்நிதானத்தை நெருங்கிய வேளை திருப்பி அனுப்பப்பட்டார்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.