முதலாம் தரத்திற்கான சுற்றுநிரூபம் திருத்தப்பட்டமை சட்டத்திற்கு எதிரானது

Friday, 19 October 2018 - 14:02

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக கல்வியமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபம், மேல் மாகாண சபையில் திருத்தப்பட்டுள்ளமை சட்டத்திற்கு எதிரானது என சட்டமா அதிபர் திணைக்களம், கல்வியமைச்சிற்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வியமைச்சின் செயலாளருக்கு இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

அடுத்த வருடத்திற்காக முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் சுற்றுநிரூபத்திற்கு அமைவாக புள்ளிகளை வழங்கும் முறையை திருத்தம் செய்வதற்கு மேல் மாகாண சபை நடவடிக்கை மேற்கொண்டமையால் கல்வியமைச்சர் இந்த அறிவித்தலை விடுத்திருந்தார்.

இந்நிலையால் அதிபர்கள் மற்றும் பெற்றோர்களும் பல பிரைச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக கல்வியமைச்சிற்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.