இலங்கை – சீனா உறவு தொடர்பில் சீனா விளக்கம்

Friday, 19 October 2018 - 14:08

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E2%80%93+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
சீனாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு வீடமைப்புத் திட்டம், தற்போது இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து சீன அரசாங்கம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சீனாவிற்கு வழங்கப்பட்ட அமெரிக்க டொலர் 300 மில்லியன் பெறுமதியான வீட்டு அபிவிருத்தி திட்டம் ஒன்று தற்போது இந்தியாவிற்கு கைமாற்றப்பட்டுள்ளதா? என சீன வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வினவப்பட்டது.

அதற்கு பதிலளித்த சீன வெளிவிவகாரத்துறை அமைச்சின் பேச்சாளர் லூ கங் கருத்து தெரிவிக்கையில், இலங்கை உட்பட ஏனைய நாடுகளுடன் சீனா இருதரப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, இரு நாடுகளும் பயனடையும் வகையில் நன்கு விரிவான ஆலோசனையை அடுத்தே திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

இரு தரப்பினரும் சம நிலையிலான நன்மைகளை பெறும் வகையிலேயே திட்ட வரைவுகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் சீன - இலங்கை ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் ஆக்கப்பூர்வமான கருத்தினை இலங்கை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் பார்வையிட முடியும்.

இது தவிர, சீனா எப்பொழுதும், வெளிநாடுகளுடனான ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் வெளிப்படை தன்மையினை உறுதியாக பேணுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே தன்மையை வெளிநாடுகளிடம் இருந்து தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த சீன வெளிவிவகாரத்துறை அமைச்சின் பேச்சாளர் லூ கங், இதன் மூலம் பிராந்தியத்தின் சமாதானம், அபிவிருத்தி என்பனவற்றை பரஸ்பரம் பேண முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.