சி.வி.விக்னேஸ்வரனின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு அடுத்த வாரம்

Saturday, 20 October 2018 - 9:10

%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி அறிவிக்க உள்ளார் என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

இது குறித்து தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் மக்களின் தற்போதைய பிரதிநிதித்துவ அரசியலானது, மக்கள் பங்களிப்புடன்கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பிலும், இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் குறித்த ஒன்றுகூடலில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.