இலங்கை அணியின் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...!!

Saturday, 20 October 2018 - 15:08

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81...%21%21
இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

கண்டி பல்லேகலை மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி சற்று முன்னர் வரை 24 ஓவர்கள் நிறைவில் 02 விக்கட்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

இதேவேளை,  இலங்கை அணி துடுப்பெடுத்தாட்டத்தின் போது  04வது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் மென்டிஸ் 14 பந்துகளுக்கு 05 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மேலும் திறமையான வீரர்கள் அணியில் இருக்கும் போது, குசல் மென்டிஸிற்கு தொடர்ந்தும் அணியில் இடம்வழங்குவது குறித்து பலர் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றைய போட்டியின் போது குசல் மென்டிஸ் ஆட்டமிழந்ததனை தொடர்ந்து இலங்கை அணியின் முன்னாள்  தலைவர்  மஹேல ஜயவர்தன தனது டுவிட்டரில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

" குசல் மென்டிஸிற்கு சர்வதேச போட்டியில் சிறிது ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர் திறமையான துடுப்பாட்ட  வீரர் என்றாலும் , இவ்வாறான நிலைமை சகலருக்கும் ஏற்படுகின்ற ஓர்  விடயம் என  மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.