நிலக்கரி சுரங்கத்தினுள் சிக்கியுள்ள 22 ஊழியர்கள்

Sunday, 21 October 2018 - 19:48

+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+22+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
சீன ஷங்டொன் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தினுள் 22 ஊழியர்கள் சிக்குண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுரங்கத்தினுள் ஏற்பட்ட வெடிப்பினை அடுத்து அவர்கள் சுரங்கத்தில் இருந்து வெளியேற முடியாத நிலையில் இருப்பதாக சீன அரச செய்தி ஸ்தாபனமான சிங் ஹூவா தெரிவித்துள்ளது.

சுரங்கத்தினுள் பாரிய பாறையினை வெடி வைத்து தகர்க்க முனைந்தபோதே இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சிக்குண்டுள்ள 22 ஊழியர்களையும் மீட்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுரங்கத்தினுள் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஏற்ற வகையிலான ஒளி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி தென் சீனாவில் இடம்பெற்ற சுரங்க வெடிப்பின் போது 13 சுரங்க தொழிலாளர்கள் மரணமாகினர்.

அதிக நிலக்கரியை உற்பத்தி செய்யும் நாடான சீனாவில் சுரங்க அனர்த்தங்கள் இடம்பெறுவது சாதாரண விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.