கிரிக்கட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரங்கன ஹேரத்!!

Monday, 22 October 2018 - 10:15

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%21%21
இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியுடன் காலியில் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் தாம் விளையாடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் இடம்பெற்ற போட்டி ஒன்றிலேயே அவர் முதன்முதலில் சர்வதேச போட்டிகளுக்கு அறிமுகமாகியிருந்தார்.

காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இதுவரையில் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் மாத்திரமே 100 விக்கட்டுக்களை கைபற்றியுள்ளார்.

இந்தநிலையில், இங்கிலாந்துடனான போட்டியின் போது ரங்கன ஹேரத் அந்த சாதனையை சமம் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரங்கன ஹேரத் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 415 வீக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.