இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து – 19 பேர் பலி

Monday, 22 October 2018 - 11:46

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E2%80%93+19+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
பாகிஸ்தானில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாபமாக பலியாகினர்.

பாகிஸ்தான் நாட்டின் தேரா காஜி கான் நகரில்  பயணித்துக்கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் திடீரென மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் பலியாகினர்

மேலும் 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பேருந்துகள் மோதிய விபத்தில் 19 பேர் பலியானதை அறிந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி ஆரிப் அல்வி ஆகியோர் பலியானோர் குடும்பங்களுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.