மீண்டும் இலங்கையை தாக்கவுள்ள கொடிய நோய் - எச்சரிக்கை

Monday, 22 October 2018 - 13:02

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D+-+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்ட மலேரியா நோய் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோரால் இந்த நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா ஒழிப்பு இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க போன்ற நாடுகளில் இந்த நோய் பரவிவரும் நிலையில், அந்நாடுகளில் இருந்து இலங்கை வருவோரால் மலேரியா நோய் பரவக்கூடும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மலேரியா ஒழிப்பு இயக்கம் இந்த நிலைமை தொடர்பில் தெளிவூட்டுவதற்காக நேற்றைய தினம் அநுராதபுரத்தில் விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.