Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+2+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
Wednesday, 07 November 2018 - 18:50
பட்டாசு வெடித்த காரணத்தால் 2 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு பதிவு
48

Views
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளி தினத்தில் பட்டாசு கொளுத்தியதாக 2 ஆயிரத்து 100 பேர் மீது தமிழகத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டாசு கொளுத்துவதனால் வெளியாகும் புகையினால் சுற்றுச்சூழல் மாசடைவதாகத் தெரிவித்து, மனுதாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை அண்மையில் பிறப்பித்திருந்தது.

2 மணி நேரத்திற்கு மாத்திரமே பட்டாசு கொளுத்த வேண்டும் என்றும், பட்டாசு கொளுத்துவதனால், காற்று மாசடைவது குறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், திறந்த வெளிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளைக் கொளுத்த மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு அமைய, தீபாவளித் தினத்தன்று காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு கொளுத்த வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த உத்தரவை மீறுவோருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் இந்திய ரூபா அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளையுமே விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த உத்தரவை மீறி பட்டாசு கொளுத்திய 2 ஆயிரத்து 100 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 343 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
993 Views
HiruNews
HiruNews
HiruNews
13,005 Views
HiruNews
HiruNews
HiruNews
9,509 Views
HiruNews
HiruNews
HiruNews
25,340 Views
HiruNews
HiruNews
HiruNews
73 Views
HiruNews
HiruNews
HiruNews
59,622 Views
Top