Hirunews Logo
%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 08 November 2018 - 20:33
ஏழு தமிழர்கள் தொடர்பில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது உரிமையை பறிக்கும் செயல்
36

Views
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேர் விடயத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது, 7 பேரின் விடுதலை உரிமையை பறிக்கும் செயல் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் எஸ்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஏழுபேரையும் விடுதலை செய்வதற்கான தமிழக அரசின் பரிந்துரை தொடர்பில் ஆளுநர் அலுவலகம் இதுவரை எந்தவித முடிவினையும் எடுக்கவில்லை.

தமிழகத்தின் உணர்வு சார்ந்த விவகாரத்தில் மாநில அரசின் பரிந்துரையை மதிக்காமல் ஆளுநர் அலுவலகம் அலட்சியமாகச் செயற்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளாக அறியப்படும் ஏழு பேர் தொடர்பில் இந்திய உயர் நீதிமன்ற நீதியரசர் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் போது அவர்களின் விடுதலை தொடர்பில் இந்திய அரசியலமைப்பின் 161வது பிரிவின்படி ஆளுநரே தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என உத்தரவிட்டிருந்தது.

இதனை அடுத்து, தமிழக அமைச்சரவை ஒன்று கூடி ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான பரிந்துரையை ஆளுனருக்கு அனுப்பியிருந்தது.

இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், தமிழக ஆளுனர் அது தொடர்பில் எந்த அறிவித்தலையும் விடுக்காதுள்ளமையானது சம்பந்தப்பட்டவர்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும் என்றும் எஸ். ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,077 Views
HiruNews
HiruNews
HiruNews
55,704 Views
HiruNews
HiruNews
HiruNews
21,427 Views
HiruNews
HiruNews
HiruNews
46,575 Views
HiruNews
HiruNews
HiruNews
1,160 Views
HiruNews
HiruNews
HiruNews
105,445 Views
Top