Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%3F
Thursday, 08 November 2018 - 20:38
முதலாளிமார் சம்மேளனத்தின் முன்மொழிவு திங்கட்கிழமை?
76

Views
பெருந்தோட்ட தொழிலாளர்களது நாளாந்த வேதனம் குறித்த தங்களது முன்மொழிவை எதிர்வரும் திங்கட்கிழமை முதலாளிமார் சம்மேளனம், கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களிடம் கையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக மூன்று கட்ட பேச்சுவார்தைகள் இடம்பெற்றுள்ளன.

எனினும், இந்த விடயத்தில் இணக்கப்பாடுகள் எவையம் ஏற்படவில்லை.

அதேநேரம், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக 600 ரூபா உட்பட ஏனைய கொடுப்பனவுகளுடன் நாளாந்தம் 940 ரூபாவையே வேதனமாக வழங்க முடியும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்திருந்தது.

இதற்கிடையில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்படும் அதேநேரம் தொழிற்சங்கங்களும் இந்த கோரிக்கையை பொதுவெளியில் முன்வைத்து வருகின்றன.

இதனிடையே, அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான குழுவினர் சந்திப்பை நடத்தி திறைசேரியின் ஊடாகவும் பாதீட்டின் ஊடாகவும் இதற்கு தீர்வு காண இணங்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் கடந்த தினம் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் நிதியமைச்சின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை உத்தியோகப்பற்றற்ற வகையில் சந்திக்கவுள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், தங்களது புதிய வேதன முன்மொழிகவுகளை அவரிடம் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களது வேதன உயர்வு தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு தினங்களில் தீர்வு கிடைக்கும் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள அவரது அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top