ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையே விசேட சந்திப்பு

Monday, 12 November 2018 - 13:11

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையே இன்று விசேட சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், எதிர்வரும் தேர்தலில் கட்டியெழுப்பப்படவுள்ள புதிய கூட்டணி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவும் பங்குபற்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றை இணைத்து இணைத்து கூட்டணி அமைப்பது குறித்தும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பங்குபெறுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இடையே நேற்று பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பிலும் எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியின் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 உறுப்பினர்கள் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை சேர்ந்த சிலரும் பங்குகொண்டிருந்தனர்.

இந்த கலந்துரையாடலில், பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் பொதுஜன முன்னணி என்ற பெயரில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுதல் என்ற இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டள்ளன.

இந்த இரண்டு யோசனைகள் தொடர்பிலும் விரிவான ஆராயப்பட்டுவருவதுடன், அது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள மேலும் சில கலந்துரையாடல்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று இரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மகாஜன எக்சத் பெரமுன, ஜனநாயக இடதுசாரிகள் முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, புதிய சமசமாஜ கட்சி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கூட்டணி மொட்டுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.