அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென்னாபிரிக்கா

Monday, 12 November 2018 - 18:26

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
அவுஸ்திரேலியா அணியுடன் இடம்பெற்ற மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது.

ஹோபார்ட் நகரில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு 320 ஓட்டங்களைப் பெற்றது.

டூ பிளஸ்ஸி  125 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 139 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுக்களை இழந்து 280 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

அதன்படி , தென்னாபிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.