காசா பள்ளத்தாக்கில் அதிகரித்துள்ள வன்முறைகள்

Tuesday, 13 November 2018 - 8:28

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
காசா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய படைகளுக்கு இடையிலான வன்முறைகள் மேலும் அதிகரித்துள்ளன.

இஸ்ரேலிய படை சிப்பாய் ஒருவரும், 7 போராளிகளும் கடந்த ஞாயிற்றுக் கிழமை காசாவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டனர்.

இதனை அடுத்து அங்கு கடும் மோதல்கள் பதிவாகியுள்ளன.

இஸ்ரேலை நோக்கி போராளிகள் குழுவினர் 300க்கும் அதிகமான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல், ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாட்களுக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதில் 3 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்ஹாஹு தமது பாரிஸ் விஜயத்தையும் இடைநிறுத்திக் கொண்டார்.