காட்டுத்தீயில் 30 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள்

Wednesday, 14 November 2018 - 7:32

+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+30+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 30 சதவீதம் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்தநாட்டின் தீயணைப்பு படை இதனை அறிவித்துள்ளது.

எனினும் எஞ்சிய வனத்தின் தீயை இந்த மாத இறுதிவரையில் கட்டுப்படுத்த முடியாது போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரவி இருந்த தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீயினால் 42 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை இந்தியாவின் மும்பை நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயினால் இரண்டு பேர் உயிரிழந்தனர்.