புதிய வகை ஆயுதம் வட கொரியாவில்

Friday, 16 November 2018 - 19:43

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
அதி உயர் தொழில்நுட்பத்தை கொண்ட புதிய வகை ஆயுதம் ஒன்று வட கொரியாவில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையின் போது வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் யூன் நேரடியாக சமூகம் தந்திருந்ததுடன் தனது திருப்தியையும் வெளியிட்டதாக வட கொரிய அரச செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

எப்படியிருப்பினும், இந்த ஆயுதத்தை தயாரிப்பதற்காக நீண்ட காலத்தை நிபுணர்கள் செலவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் வட கொரியாவினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆயுத பரிசோதனை இது என அரச செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.