பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

Saturday, 17 November 2018 - 12:53

%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
கஜா புயலால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
 
நேற்று முந்தினம் இரவு வீசிய கஜா புயல் வீசிய நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம்,தஞ்சை, திருவாரூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலா 7 பேரும், கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் தலா 2 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இது தவிர 1 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கலிபோர்னியாவில் பரவியுள்ள காட்டுத்தீ காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கலிபோர்னிய உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காட்டுத்தீ காரணமாக 1000க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.