43 பேர் கொலை..! இதுவரை லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழப்பு

Sunday, 18 November 2018 - 8:13

43+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88..%21+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
ஈராக் எல்லை அருகே உள்ள டெயிர் எஸ்ஸார் மாகாணத்தில் அபு ஹசன் எனும் கிராமத்தில் இந்த வான்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் குடும்பத்தினர் உட்பட 43 பேர் பலியாகினர்.

இதன்போது பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எவ்வாறாயினும் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க கூட்டுப் படையினர், தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழப்பதை தடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்தனர்.
 
சிரியாவில் அரசாங்கத்திக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்களும்  ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினரும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இதில் சிரியா அராசங்கத்திற்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டு படை மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரச படைகள் உள்ளன.

சிரியாவில் இதுவரை இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் தாக்குதல்களால் குழந்தைகள், பெண்கள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.