ஜனாதிபதிக்கும், சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கும் இடையில் தொலைபேசி மூலம் கலந்துரையாடல்..

Sunday, 18 November 2018 - 12:27

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D..
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலை தொடர்பில் ஜனாதிபதிக்கும், சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கும் இடையில் தொலைபேசி மூலம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலை குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனுமான கருத்துப் பரிமாறல் இடம்பெற வேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இன்று இடம்பெறவுள்ள சந்திப்பில் சபாநாயரக் கலந்துகொள்ளமாட்டார் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை அனைத்துக் கட்சி மாநாடொன்றை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியினர் பங்குகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று இடம்பெறவுள்ள அனைத்துக்கட்சி மாநாட்டில் தமது கட்சி பங்குகொள்ளப்போவதில்லையென ஜேவிபி தெரிவித்துள்ளது.

கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜேவிபி குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறெனினும் இன்று இடம்பெறும் அனைத்துக்கட்சி மாநாட்டில் தாங்கள் பங்குகொள்ளவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன்இ தமிழ் முற்போக்கு கூட்டணியினரும் இந்த மாநாட்டில் பங்குகொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பனவும் இந்த மாநாட்டில் பங்குகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மகிந்த தரப்பு கட்சிகளான மக்கள் ஐக்கிய முன்னணி, ஜனநாயக இடதுசாரிகள் கட்சிஇ தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய போன்ற கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதை அந்தக் கட்சித் தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அனைத்துக்கட்சிகளுக்கு மத்தியிலும் சுமுகமான நிலையை தோற்றுவிக்கும் நோக்கிலேயே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.