ஐக்கிய தேசிய கட்சிக்கு டளஸ் அழகப்பெரும விடுத்துள்ள சவால்

Sunday, 18 November 2018 - 19:18

%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
ஐக்கிய தேசியக் கட்சியினர் 113 என்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும சவால் விடுத்துள்ளார்.

சத்தியபிரமாணத்தின் மூலம், 113 பேர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கிறார்கள் என்று கடிதம் ஒன்றை வழங்கினால், அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தமது கண்களினால் காணவில்லை.

அத்துடன், நம்பிக்கையில்லா பிரேரணையின் அடிப்படை நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு நான்கு நிமிடங்களிலேயே அதனைத் தாம் ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளதாக டளஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.