வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி!

Sunday, 18 November 2018 - 19:35

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%21
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

அபுதாபியில் இடம்பெறும் இந்தப் போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி, சற்று முன்னர் வரை விக்கட் இழப்பின்றி 37 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி, 153 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

அத்துடன், இரண்டாவது இன்னிங்ஸில், 249 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதேவேளை, பாகிஸ்தான் அணி, தமது முதலாவது இன்னிங்ஸில் 227 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தது.

இந்நிலையில் , 176 என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.