சர்வகட்சி கூட்டம் நிறைவு - அனைத்து கட்சித் தலைவர்களும் இணக்கம்!! (காணொளி)

Sunday, 18 November 2018 - 19:29

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+-+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற சர்வகட்சி கூட்டம் நிறைவடைந்துள்ளது.

இதன்போது , நாடாளுமன்றில் முரண்பாடுகளை தவிர்த்து சமாதானமான முறையில் செயற்பட அனைத்து கட்சி தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ , முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

நாடாளுமன்றத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற அரசியல் குழப்ப நிலைமை மற்றும் மோதல்கள் என்பனவற்றை முடிவுக்கு கொண்டுவந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளை உரிய முறையில் முன்கொண்டு செல்வதற்காக அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நேற்றைய தினம் இந்த சர்வகட்சி பிரதிநிதிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

எனினும், சபாநாயகர் கரு ஜயசூரியவும், ஜே.வி.பியினரும் இந்த சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் கலந்து கொள்ளவில்லை.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமை மற்றும் நாட்டின் அரசியல் நிலைமை என்பன குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும், சபாநாயகர் கரு ஜயசூரியவும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

இதன்போது, தற்போதைய நிலைமைகள் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் கருத்தப் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சர்வகட்சி பிரதிநிதிகள் கூட்டத்திற்கு முன்னதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், கொழும்பு - விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னதாக இதன்போது கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறித்த சந்திபபின் பின்னர் தெரிவித்துள்ளார்.