வடக்கு முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள அழைப்பு

Monday, 19 November 2018 - 6:51

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ் கட்சிகளையும் தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிடுவதற்கு அழைப்பு விடுப்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இணைத் தலைவருரையை ஆற்றிய போதே வட மாகாண முன்னாள் முதலமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

தான் எந்தக் கட்சிக்கும் பக்கச்சார்பாக நின்று அதன் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்றும், இது தங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பதுடன், தமிழ் மக்கள் பேரவைக்குள் பிளவை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான், எந்தக் கட்சிக்கும் சார்பாகச் செயற்படாமல் ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிடவும், கொள்கை அடிப்படையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு ஊடாகத் தேர்தல் அரசியலை பயன்படுத்திக்கொள்வதற்கு தன்னுடன் கைக்கோர்க்குமாறு அழைப்பு விடுக்கதாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

கட்சிகளின் சின்னங்கள் பல காலம் பாவிக்கப்படும் போது அவற்றுடன் அந்தந்தக் கட்சிகள் மீதுள்ள மதிப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்பு போன்றவை அடையாளப்படுத்தப்படுகின்றன.

புதிதாக கொள்கை அடிப்படையில் அரசியலில் உள்நுழைவோர், அந்தந்தக் கட்சிகளின் சின்னங்களுடன் இணைந்து தேர்தலில் செயற்பட்டால் அல்லது அவற்றின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டால் அந்தந்தக் கட்சி சின்னங்கள் சம்பந்தமாக மக்களிடையே இருக்கும் நம்பிக்கைகளும், அவ நம்பிக்கைகளும் புதிய கட்சியில் மேலும் பதிவாகும்.

அதன் பின்னர் சின்னத்தைத் தரும் அந்தக் கட்சியின் பொறுப்புக்களையும் இறந்த கால நிகழ்வுகளையும் புதிய கட்சி சுமை தாங்கிப் பயணிக்க வேண்டியிருக்கும்.

இதன் காணரமாக கொள்கைகளைப் பரப்ப வந்தவர்கள், கடந்த கால கோபதாபங்களிற்கு ஆளாக நேரிடும்.

எனவேதான் ஒரு பொதுவான சின்னத்துடன் அல்லது புதிய சின்னத்துடன் கொள்கைகள் சார்ந்து பயணிக்க வேண்டும் என்று எமது கட்சி பற்றி அபிப்பிராயம் தெரிவித்துள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்கள் பேரவையின் இன்றை கூட்டத்தில் புளொட் அமைப்பு வெளியியேற்றப்பட்டதாக பேரவை பேச்சாளர் கலாநிதி சரவணபவன் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் பங்கேற்பதற்கான உரிய நடைமுறைகளை பின்பற்றாததன் காரணமாகவே, புளொட் அமைப்பினர் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியியேற்றப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.