வெற்றியை நோக்கி பாகிஸ்தான்

Monday, 19 November 2018 - 7:53

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி நேற்றைய நாள் ஆட்டம் நிறைவு வரை, விக்கட் இழப்பின்றி 37 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக நியூசிலாந்து அணி தமது 2வது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 227 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 153 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்தநிலையில், பாகிஸ்தான் அணிக்கு பத்து விக்கட்டுக்களும் கைவசம் உள்ள நிலையில், வெற்றி பெற மேலும் 139 ஓட்டங்களே தேவைப்படுகிறது.