வேதன உயர்வு குறித்து திறைசேரியுடன் இன்று பேச்சுவார்த்தை

Monday, 19 November 2018 - 14:00

%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு குறித்து, தொழிற்சங்கள் மற்றும் திறைசேரிக்கும் இடையிலான பேச்சு வார்த்தை ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

திறைசேரியில் இந்த பேச்சு வார்த்தை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபா வேதனம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தொழிற்சங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு இடையில் 3 கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

எனினும், இந்த பேச்சு வார்த்தைகளின் மூலம் முதலாளிமார் சம்மேளனம் 600 ரூபா வேதன உயர்வுக்கே இணக்கம் வெளியிட்டிருந்தது.

இதேவேளை, தொழிற்சங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு இடையிலான 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் இந்த வாரமளவில் இடம்பெறலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.