ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை

Monday, 19 November 2018 - 16:25

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88
பொதுபல சேனா அமைப்பின் தேரர்கள் உள்ளிட்ட தரப்பினர் இன்று (19) முற்பகல் அறிக்கையொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு பிரவேசித்த போது, அவர்களின் மீது கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனிப்பட்ட முறையில் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

அவரது ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேரர்கள் சிலரால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பௌத்த தேரர்கள் இன்றைய தினம் ஜனாதிபதியை சந்திக்க வருகை தருவதாக அறிவித்திருக்கவில்லை என்பதுடன், கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்வதற்கு கட்டளையிட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து சுமூகமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட ஜனாதிபதி, அத்தேரர்களினால் கலகொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைத்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் பெற்றுக்கொண்டார்.