லஹிரு மதுசங்கவை விடுவிக்க புதிய முயற்சி

Monday, 19 November 2018 - 17:45

%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீன் மீதான கொலை சூழ்ச்சி தொடர்பில் அந்நாட்டு உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த இளைஞரான 27 வயதுடைய லஹிரு மதுசங்க மெனிக்கந்துரவை விடுதலை செய்துக்கொள்வதற்காக புதிய முயற்சியொன்று முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கம் இவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலியின் பதவிப்பிரமாண நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறப்பு பிரதிநிதியாக அமைச்சர் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது , முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் போன்று மாலைத்தீவின் சட்டமாஅதிபர் மற்றும் வௌிவிவகார அமைச்சருடன் லஹிரு மதுசங்க தொடர்பில் அமைச்சர் பேச்சுவார்த்தையில் மேற்கொண்டுள்ளார்.

கடந்த மூன்று வருட காலமாக மாலைத்தீவு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லஹிரு மதுசங்கவை கடந்த வாரம் சந்தித்ததாக பைஸர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டார்.